வாட்ஸ்அப் போன்ற வசதிகளை கொண்ட 5 மெசேஜிங் ஆப்ஸ்
வாட்ஸ்அப் உலகின் பிரபலமான குறுந்தகவல் செயலியாக
இருக்கிறது. எனினும், சமீபத்திய பிரைவசி பாலிசி மாற்றம் காரணமாக வாட்ஸ்அப் செயலி
மீது பயனர்கள் அதிருப்தியில் உள்ளனர். புதிய பிரைவசி பாலிசிக்கு ஒப்புதல்
அளிக்காத பட்சத்தில் செயலியை தொடர்ந்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு
இருக்கிறது.
இந்த நிலையில், வாட்ஸ்அப் செயலியை தொடர்ந்து பயன்படுத்த வேண்டாம்
என நினைப்பவர்கள் அந்த செயலிக்கு மாற்றாக அதே போன்ற அம்சங்கள் கொண்ட 5 மெசேஜிங்
ஆப்ஸ் என்ன என்பதை தொடர்ந்து பார்க்கலாம்..,
டெலிகிராம்
டெலிகிராம் ஆப் பல ஆண்டுகளாக இருந்து வரும் அசத்தலான
ஒன்று ஆகும். இது வாட்ஸ்அப் செயலிக்கு சிறந்த மாற்றாக விளங்குகிறது. வாட்ஸ்அப்
செயலி தற்சமயம் வழங்கும் பெரும்பாலான அம்சங்கள் இந்த செயலியிலும் கிடைக்கிறது.
இந்த செயலி ஆண்ட்ராய்டு, ஐஒஎஸ், விண்டோஸ் போன், மேக்ஒஎஸ், லினக்ஸ் மற்றும் வெப்
போன்ற தளங்களில் கிடைக்கிறது.
சிக்னல்
வாட்ஸ்அப் செயலிக்கு மாற்றாக கிடைக்கும் மற்றொரு சிறந்த செயலி
சிக்னல். வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் மெசஞ்சரில் என்ட்-டு-என்ட் என்க்ரிப்ஷன்
சேவையை வழங்குவது சிக்னல் பவுன்டேஷன் நிறுவனம் தான். இதன் சொந்த படைப்பான சிக்னல்
பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை கொண்டிருக்கிறது. சிக்னல் செயலி ஆண்ட்ராய்டு
மற்றும் ஐஒஎஸ் தளங்களில் கிடைக்கிறது.
டிஸ்கார்டு
கேமிங் மட்டுமின்றி டிஸ்கார்டு தளத்தில் சாட் அம்சமும்
கிடைக்கிறது. இதை கொண்டு தனிப்பட்ட குறுந்தகவல், ஜிப் பைல்கள், புகைப்படங்கள்
மற்றும் டாக்யூமென்ட் உள்ளிட்டவற்றை பகிர்ந்து கொள்ள முடியும். மேலும் வாட்ஸ்அப்
போன்றே வாய்ஸ் மற்றும் வீடியோ கால் வசதி வழங்கப்படுகிறது. இந்த செயலி
ஆண்ட்ராய்டு, ஐஒஎஸ், விண்டோஸ் போன், மேக்ஒஎஸ், லினக்ஸ் மற்றும் வெப் போன்ற
தளங்களில் கிடைக்கிறது.
வைபர்
குறுந்தகவல் செயலிகளில் பிரபலமான ஒன்றாக வைபர் விளங்குகிறது.
இந்த செயலியும் என்ட்-டு-என்ட் என்க்ரிப்ஷன் வசதியை கொண்டிருக்கிறது. மேலும்
வைபர் பயனர்கள் சர்வதேச அழைப்புகளை வைபர் செயலியை பயன்படுத்தாவர்களுக்கும்
மேற்கொள்ளும் வசதி இதில் வழங்கப்படுகிறது.
பிரிட்ஜிபை
ஆப்லைனிலும் இயங்கும் குறுந்தகவல் செயலியாக பிரிட்ஜிபை
(Bridgefy) இருக்கிறது. இணைய வசதி இல்லாத நேரத்திலும் சாட் செய்யும் வசதியை இந்த
செயலி வழங்குகிறது. இது ப்ளூடூத் மெஷ் நெட்வொர்க் மற்றும் வைபை டைரக்ட் சார்ந்த
நெட்வொர்க்கில் இயங்குகிறது. இதை கொண்டு அருகாமையில் உள்ள நண்பர்களுக்கு
குறுந்தகவல் அனுப்பலாம். இந்த செயலி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் தளங்களில் இலவசமாக
கிடைக்கிறது.
Post Comment
No comments