தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்ற மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!
சி.பி.எஸ்.இ போட்டி தேர்வுகளை ரத்து செய்ய மாணவர்கள் தாக்கல்
செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு
தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்ற மனுவை தள்ளுபடி செய்தது
உச்சநீதிமன்றம்! சி.பி.எஸ்.இ போட்டி தேர்வுகளை ரத்து செய்ய மாணவர்கள் தாக்கல்
செய்த மனுவை உச்சநீதிமன்றம் ஆகஸ்ட் 20ஆம் தேதி தள்ளுபடி செய்தது. இருப்பினும்,
12ஆம் வகுப்பு தேர்வில் 5 முக்கிய பாடங்களில் ஒன்றில் தோற்றவருக்கு சி.பி.எஸ்.இ
வெளியிட்டுள்ள அறிவிப்பு, மனுதாரர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும்
அதற்கு மாணவர்கள் தரப்பில் மனு தாக்கல் செய்யும்படி அனுமதி அளித்துள்ளது.
கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக தேர்வை ரத்து செய்ய மனுதாரர்கள்
தரப்பில் கோரப்பட்டிருந்தது. உச்சநீதிமன்றத்தின் விசாரணையின் போது வழக்கறிஞர்
சக்தி பாண்டே, சிபிஎஸ்இ வாரியத் தேர்வுகளை ரத்து செய்ய முடியாவிட்டால் தேர்வு
தேதிகளை வெளியிட வேண்டும் என்று கூறினார்.
செப்டம்பர் 10, 2020ல் 10 மற்றும் 12ஆம் வகுப்பிற்கான தேர்வுகள்
நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ முன்பு அறிவித்திருந்தது. அதன் பின் அதிகாரப்பூர்வ
அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. சி.பி.எஸ்.இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு
தேர்வுகள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை நடைமுறை படுத்தப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ
கம்பார்ட்மென் தேர்வுகள் 2020க்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வாரியத்தின்
அதிகாரப்பூர்வ வலைதளமான cbse.nic.inஐ பார்க்கவும்.
சிபிஎஸ்இ தரப்பில் 1ஆம் 2வகுப்பில் பெப்ரவரி/மார்ச் 2020
வாரியத்துடன் இணைந்த பள்ளிகளில் உள்ள மாணவர்கள் 1 பாடத்திற்கு மட்டும்
விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் 10ஆம் வகுப்பில் பெப்ரவரி/மார்ச் 2020 வாரியத்துடன் இணைந்த
பள்ளிகளில் உள்ள மாணவர்கள் 1 அல்லது 2 பாடங்களுக்கு மட்டும் விண்ணப்பிக்க
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
10 மற்றும் 12ஆம் வகுப்புத் தேர்வுகளுக்கு இந்தியாவில் ஒருபாடத்தில் 30
ரூபாய்யாகும். இந்தியாவுக்கு வெளியே உள்ள பள்ளிகளுக்கு 2000 ரூபாய்
நிர்ணைக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகஸ்ட் 13 மாலை 5 மணி.
தாமதமாக தேர்வு கட்டணம் செலுத்தினால், சாதாரண கட்டணத்துடன் கூடுதலாக 2,000 ரூபாய்
செலுத்த வேண்டும்.
No comments