Header Ads

Recent

வங்கிகள் வரும் 15, 16ம் தேதி ஸ்டிரைக்.. 4 நாட்கள் வங்கிகள் இயங்காது

வங்கிகள் வரும் 15, 16ம் தேதி ஸ்டிரைக்.. 4 நாட்கள் வங்கிகள் இயங்காது!

       சென்னை: பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்து அகில இந்திய வங்கி ஊழியர் கூட்டமைப்பினர் சார்பில் வரும் 15, 16 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதற்கு முந்தைய நாளான 13ம் தேதி இரண்டாவது சனிக்கிழமை என்பதுடன், 14ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் 4 நாட்கள் தொடர்ந்து வங்கி இயங்காது. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் சிரமத்திக்குள்ளாகும் அபாயம் உள்ளது.
     பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவதைக் கண்டித்து, அகில இந்திய தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அதிகாரிகளின் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் நேற்று பத்திரிகையாளர் சந்தித்தனர். 15, 16ம் தேதி ஸ்டிரைக் செய்தியாளர்களிடம் பேசிய வங்கி ஊழியர் கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் மணிமாறன் பேசுகையில், பொதுத் துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதை கண்டித்து வரும் மார்ச் 15, 16 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற போகிறது. 
  வங்கிகள் தனியார் மயமாக்கப்படுவதால் பொதுமக்களுக்கு எந்த மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என்பதை வேலை நிறுத்தம் செய்யும் நாட்களில் மக்களிடம் விளக்கி கூறுவோம். 

பொதுத்துறை 
      வங்கி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வங்கி ஊழியர்கள் கலந்து கொள்கின்றனர். 
  மேலும், பொதுத்துறை வங்கிகளின் சிறப்பான கடன் வழங்கு அணுகுமுறையால் வேளாண்மை, சிறு மற்றும் குறு தொழில்கள், சேவை துறை ஆகியவை சிறப்பான வளர்ச்சி கண்டுள்ளது.
 
கடன் வழங்கி உள்ளோம் 
     மார்ச் 2020 புள்ளிவிவரப்படி பொதுத்துறை வங்கிகளின் மொத்த கடன், வேளாண் மற்றும் வேளாண்சார்ந்த துறைகளுக்கு ரூ.12,39,575 கோடியாகவும், தொழில் துறைக்கு ரூ.32,52,801 கோடியாகவும் இருந்தது. 
   இதில், சிறுகுறு தொழில்களுக்கு ரூ.4,37,658 கோடியாகவும், நடுத்தர தொழில்களுக்கு ரூ.1,12,376 கோடியாகவும், பெரும் தொழில்களுக்கு ரூ.26,11,369 கோடியாகவும் இருந்தது. 
 
கல்வி கடன் 
     கோடிக்கணக்கான இளைஞர்களின் உயர்கல்விக் கனவுகளை பொதுத்துறை வங்கிகள் நனவாக்கி உள்ளன.. கல்விக் கடனாக பொதுத்துறை வங்கிகள் வழங்கியுள்ள தொகை ரூ.79,06 கோடிகளாகும். 
       அதேபோன்று, நலிவடைந்த பிரிவினருக்கு பொதுத்துறை வங்கிகளின் கடன் உதவி மார்ச் 2020ம் ஆண்டில் ரூ.6,83,876 கோடி வழங்கப்பட்டுள்ளது. ஜன்தன் கணக்குகள் பொதுத்துறை வங்கிகள் வழங்கிய பெருமளவு கடன்களினால் பல லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு வழங்கும் தொழிலதிபர் ஆனார்கள். 
    ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ் சாமானிய மக்களுக்கு வங்கிக் கணக்குகள் துவங்க வேண்டும் என்று அரசு அறிவித்தபோது பொதுத்துறை வங்கிகள் 33.17 கோடி ஜன்தன் கணக்குகளை துவங்கின. ஆனால் தனியார் வங்கிகளின் பங்கு வெறும் 1.25 கோடி கணக்குகள் தான் துவங்கின.. எனவே வங்கிகள் தனியார் மயமாக்கப்பட்டதால் சாமானிய மக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். 
       அவர்களுக்கு வங்கி சேவைகள் அவர்களுக்கு எட்டாக்கனியாக்கி விடும். போராட்டம் நடைபெறும் எனவே வங்கிகள் தனியார் மயமாக்கப்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மார்ச் 15, 16 ஆகிய தேதிகளில் தெருமுனைக் கூட்டங்கள், வாடிக்கையாளர் சந்திப்புகள், ஆர்ப்பாட்டங்கள், கருப்புப்பட்டை அணிந்து, எதிர்ப்பு முகக்கவசங்கள், சுவரொட்டிகள் பதாகைகள் துண்டு பிரசுரங்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்
       எனவே வங்கிகள் தனியார் மயமாக்குவதை கண்டித்து நடைபெறும் வேலை நிறுத்தத்திற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்" இவ்வாறு கூறினார்..
         வங்கிகள் இயங்காது வங்கிகளை தனியார்மயமாக்குவதை கண்டித்து, வரும் 15, 16 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்தத்தில் அகில இந்திய வங்கி ஊழியர் கூட்டமைப்பினர் ஈடுபட உள்ளார்கள். 
   இந்நிலையில் அதற்கு முந்தைய நாளான 13ம் தேதி இரண்டாவது சனிக்கிழமை என்பதுடன், 14ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் 4 நாட்கள் தொடர்ந்து வங்கி இயங்காது. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் சிரமத்திக்குள்ளாகும் அபாயம் உள்ளது

No comments