இந்தியாவில் 2.10 லட்சம் பேருக்கு கொரோனா சிகிச்சை
இந்தியாவில் 2.10 லட்சம் பேருக்கு கொரோனா சிகிச்சை
புதுடில்லி: நாட்டில், கொரோனா வைரஸ்
பாதிப்புகள் அதிகரித்து வருவதால், நேற்றைய நிலவரப்படி, சிகிச்சையில் இருப்போர்
எண்ணிக்கை, 2.10 லட்சமாக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து, மத்திய
சுகாதார அமைச்சகம், நேற்று வெளியிட்டு உள்ள அறிக்கை:பரிசோதனைகொரோனா பாதிப்பைக்
கண்டறிய, கடந்த, 24 மணி நேரத்தில், 8.64 லட்சம் பேரிடம் பரிசோதனைகள்
நடந்தன.இதன் முடிவுகள் வாயிலாக, 25 ஆயிரத்து, 320 பேரிடம் பாதிப்பு உறுதியானது.
இவர்களுடன், கொரோனா தொற்றுக்கு உள்ளானோர் எண்ணிக்கை, ஒரு கோடியே, 13 லட்சத்து,
59 ஆயிரத்து, 48 ஆக, உயர்ந்துள்ளது.சுகாதாரத்துறையின் தொடர் நடவடிக்கைகளால்,
வைரஸ் பாதிப்பில் இருந்து, ஒரு கோடியே, ஒன்பது லட்சத்து, 89 ஆயிரத்து, 897 பேர்
குணமடைந்து உள்ளனர்; மீட்பு விகிதம், 96.75 சதவீதமாக உள்ளது.
சில மாநிலங்களில், கொரோனா பரவல் வேகம் அதிகரித்து
வருகிறது. இதனால், சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை தொடர்ந்து உயர்கிறது.
இதன்படி தற்போது, 2.10 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர். இவர்களின் விகிதம்,
ஒட்டுமொத்த பாதிப்பில், 1.85 சதவீதமாக உள்ளது. கொரோனா பாதிப்பால் கடந்த ஒரே
நாளில், 161 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில், 88 இறப்புகள்
பதிவாகி உள்ளன.
பஞ்சாபில், 22 பேரும், கேரளாவில், 12 பேரும்
இறந்துள்ளனர்.பட்டியல்இவர்களுடன், இதுவரை பலியானோர் எண்ணிக்கை, ஒரு லட்சத்து,
58 ஆயிரத்து, 607 ஆக அதிகரித்து உள்ளது.மஹாராஷ்டிராவில், 52 ஆயிரத்து, 811
பேரும்; தமிழகத்தில், 12 ஆயிரத்து, 543; கர்நாடகாவில், 12 ஆயிரத்து, 387 பேரும்
இறந்துள்ளனர். இப்பட்டியலில், டில்லி, மேற்கு வங்கம், உத்தர பிரதேசம், ஆந்திரா
ஆகியவை, அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.இவ்வாறு, அந்த அறிக்கையில்
கூறப்பட்டுள்ளது.
8 மாவட்டங்களில் தொற்று அதிகரிப்பு
சென்னை: தமிழகத்தில் சென்னை, கோவை உட்பட எட்டு மாவட்டங்களில்,
கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி
குறிப்பு:மாநிலத்தில் உள்ள, 257 கொரோனா பரிசோதனை ஆய்வகங்களில் நேற்று மட்டும்,
67 ஆயிரத்து, 269 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு, 759 பேருக்கு தொற்று
கண்டறியப்பட்டுள்ளது.அதிகபட்சமாக, சென்னையில், 294 பேர்; கோவையில், 63 பேர்;
செங்கல்பட்டில், 58 பேர்; தஞ்சாவூரில், 44 பேர்; திருவள்ளூரில், 42;
திருப்பூரில், 33 பேர்; காஞ்சிபுரத்தில், 27 பேர்; ஈரோட்டில், 22 பேர் என,
எட்டு மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதுவரை, 1.82 கோடி மாதிரிகள் பரிசோதனையில், எட்டு
லட்சத்து, 59 ஆயிரத்து, 726 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் நேற்று, 547
பேர் உட்பட, எட்டு லட்சத்து, 42 ஆயிரத்து, 309 பேர் குணமடைந்து, வீடு
திரும்பியுளளனர்.தற்போது, சென்னையில், 1,979 பேர்; செங்கல்பட்டில், 397 பேர்;
கோவையில், 396 பேர் என, மாநிலம் முழுதும், 4,870 பேர் சிகிச்சை பெற்று
வருகின்றனர். தொற்றால் நேற்று நான்கு பேர் உட்பட, இதுவரை, 12 ஆயிரத்து, 547
பேர் இறந்துள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments