அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் 6 சிலிண்டர்கள்
தமிழகத்திலுள்ள அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் விலையில்லா 6 சிலிண்டர்கள்
வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில்
பிரசாரத்தில் ஈடுபட்டு அவர் பேசியதாவது, விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும்
எம்.ஆர். முத்தமிழ்செல்வனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள்.
விக்கிரவாண்டியில் 4,500 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவை இத்தொகுதி மக்கள் வெற்றி பெறச் செய்துள்ளனர்.
விவசாயிகளின் விலை பொருள்களுக்கு உரிய விலை கிடைக்க அதிமுக அரசு நடவடிக்கை எடுக்கும். 10 நாள்கள் வேலைத் திட்டம் 150 நாள்களாக உயர்த்தப்படும்.
இதனைத் தொடர்ந்து மயிலம் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்ட அவர், விவசாயியாக பிறந்ததை பிறவிப் பலனாக கருதுகிறேன். நான் விவசாயி என்றால் ஸ்டாலினுக்கு கோபம் வருகிறது.
கடந்த ஆண்டு அரசுப் பள்ளி மாணவர்களில் 6 பேர் மட்டுமே மருத்துவப் படிப்பில் பயின்றனர். ஆனால் தற்போது 7.5 சதவிகித இடஒதுக்கீடால் 313 மாணவர்கள் மருத்துவம் பயில்கின்றனர் என்று கூறினார்.
பின்னர் திண்டிவனத்தில் வேட்பாளர் அர்ஜூனனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசியதாவது, ஸ்டாலின் வாரிசு அரசியல் செய்யமாட்டேன் என்று கூறினார். அதேபோன்று உதயநிதி ஸ்டாலினும் அரசியலுக்கு வரமாட்டேன் என்று தெரிவித்தார். ஆனால், இருவருமே தற்போது முரணாக செயல்படுகின்றனர்.
வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக இந்த தேர்தல் இருக்க வேண்டும் என்றும் மக்களிடம் கூறினார்

No comments