கருப்பு பூஞ்சை நோயை சிகிச்சை மூலம் குணப்படுத்திடலாம் மக்கள் அச்சப்பட தேவையில்லை
கருப்பு பூஞ்சை நோயை சிகிச்சை மூலம் குணப்படுத்திடலாம் மக்கள் அச்சப்பட
தேவையில்லை
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களுக்கு வரும் கருப்பு
பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்க தேவையான மருந்துகள் உள்ளது எனவும், மக்கள்
அச்சப்படத் தேவையில்லை எனவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா பாதிக்கப்பட்ட
சர்க்கரை நோயாளிகளுக்கு ஸ்டீராய்டு மருந்துகள் கொடுக்கப்படுவதாகவும், இந்த
மருந்து ஒரு சிலருக்கு சர்க்கரை அளவை மேலும் அதிகரித்து கருப்பு பூஞ்சை ஏற்பட
வழிவகுக்கிறது எனவும் தெரிவித்தார்.
கொரோனாவால் இறந்தவர்களின் சடலங்களை எரியூட்ட மயானத்தில் உறவினர்கள்
காத்திருப்பதை தவிர்க்க அதிகாரிகள் நியமிக்கப்படவுள்ளதாகவும், ஆம்புலன்ஸ்
தட்டுப்பாட்டை போக்க மாநகராட்சி சார்பில் 220 இன்னோவா கார்கள் தற்காலிக
ஆம்புலன்ஸ்களாக மாற்றப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
கறுப்பு பூஞ்சை பரவலை பெருந்தொற்றாக அறிவிக்குமாறு மாநில அரசுகளை சுகாதார
அமைச்சகம் அறிவுறுத்தல்
கறுப்பு பூஞ்சை எனப்படும் பிளாக் ஃபங்கஸ் பரவலை பெருந்தொற்றாக
அறிவிக்குமாறு மாநில அரசுகளை சுகாதார அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. மியூகார்
என்ற பூஞ்சையால் உருவாகும் இந்த தொற்று மியூகோர்மைகோசிஸ் (mucormycosis) என்று
அழைக்கப்படுகிறது.
கொரோனா தொற்று ஏற்பட்டு குணமானவர்கள் மத்தியில் இந்த கறுப்பு பூஞ்சை
தொற்று காணப்படுகிறது. தலை, முகம், வாய் உள்ளிட்ட பகுதிகளில் பரவுகிற இந்த
பூஞ்சையால் உயிரிழப்பு வரை ஏற்படும்.
குறிப்பாக சர்க்கரை நோய் இருந்து, கொரோனா வந்து குணமானவர்களுக்கு
இது அதிகம் பரவுவதாக கூறப்படுகிறது. மகாராஷ்டிராவில் இதுவரை 1500 பேருக்கு இது
பரவியதில் 90 பேர் இறந்து விட்டனர். பல்வேறு மாநிலங்களில் கறுப்பு பூஞ்சை
பரவுவதால் அதை பெருந்தொற்றாக அறிவித்து சுகாதார அமைச்சகம் அறிவிப்பு
வெளியிட்டுள்ளது
No comments