அங்கீகாரம் இல்லாத தனியார் தொடக்கப் பள்ளிகளை மூட தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு
அங்கீகாரம் இல்லாத தனியார் தொடக்கப் பள்ளிகளை மூட தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு
தமிழகத்தில் அங்கீகாரம் இன்றி செயல்படும் நர்சரி, பிரைமரி, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை மூட வேண்டும் என்று தொடக்க கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், அங்கீகாரம் இன்றி செயல்படும் பள்ளிகளின் விவரங்களை அனுப்ப வேண்டும் என்றும், அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களை வேறு பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்தகைய பள்ளிகள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை விவரத்தினை தொடக்க கல்வி இயக்கத்திற்கு அனுப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கிறார்.
No comments