தமிழகத்தில் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,438 ஆக அதிகரிப்பு
தமிழகத்தில் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,438 ஆக
அதிகரிப்பு
தமிழகத்தில் கடந்த ஜூலை 2ந் தேதி கணக்கீட்டின் படி கருப்பு பூஞ்சையால்
பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3ஆயிரத்து438ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் 1032 பேரும், மதுரையில் 519 பேரும், சேலத்தில் 353 பேரும், கோவையில் 256பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டவர்களில் 2667 பேர் அரசு மருத்துவமனைகளிலும், 771 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேசமயம், நீலகிரி, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்துர், திருவள்ளூர், அரியலூர், விருதுநகர், கரூர், தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் கருப்பு பூஞ்சை பாதிப்பு முற்றாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments