அரசு ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு – ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்கும் புதிய முறை
அரசு ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு – ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்கும் புதிய
முறை!
தமிழகத்தில் ஓய்வூதியம் பெறுபவர்கள் எளிதாக வீட்டில் இருந்தே டிஜிட்டல் ஆயுள்
சான்றிதழை சமர்ப்பிக்கும் முறை குறித்து இப்பதிவில் தெரிந்துகொள்வோம்.
ஆயுள் சான்று:
இந்தியாவில் மத்திய அரசின் ஜீவன் பிரமான் திட்டத்தின் மூலம் ஓய்வூதியதாரர்களுக்கு
டிஜிட்டல் பயோமெட்ரிக் முறையில் ஆயுள் சான்றிதழ் வழங்கும் திட்டம் நடைமுறையில்
உள்ளது. இதன் மூலம் ஓய்வூதியதாரர்கள் எண்ம முறையில் கைரேகையை பதிவு செய்து ஆயுள்
சான்று பெற்று வருகின்றனர். இந்த நிலையில் ஓய்வூதியதாரர்கள் அஞ்சலகங்களின் மூலம்
தங்களின் ஆயுள் சான்றை டிஜிட்டல் முறையில் பெற சிறப்பு ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதியத்துறை
அலுவலகத்திற்கு செல்லலாமல் வீட்டில் இருந்தே ஆயுள் சான்றை சமர்ப்பிக்க முடியும்.
அதாவது ஓய்வூதியர்கள் தங்கள் பகுதியில் உள்ள அஞ்சல்காரரிடம் உங்கள் ஆதார் எண்,
மொபைல் எண், ஓய்வூதிய அடையாள அட்டை எண், வங்கி கணக்கு விவரம் போன்றவைகளை
சமர்ப்பித்து கைரேகையை பதிவு செய்ய வேண்டும். இதன் மூலம் டிஜிட்டல் ஆயுள்
சான்றிதழை சமர்ப்பிக்க முடியும். அஞ்சலகரை அணுக முடியாத ஓய்வூதியர்கள்
இணையதளத்திற்கு சென்று ஜீவன் பிராமன் சர்வீஸ் என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து
உங்களுடைய விவரங்களை பதிவு செய்து ஓய்வூதியர்கள் உங்கள் இருப்பிடத்திற்கு அருகில்
உள்ள அஞ்சல் ஊழியர் மூலம் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழை சமர்பிக்கலாம்.
No comments