ரயில்வேயில் வேலை: 2206 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
ரயில்வேயில் வேலை: 2206 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
கிழக்கு மத்திய ரயில்வேயின்கீழ் செயல்பட்டு வரும் ரயில்வே தொழிற்சாலையில் ஐடிஐ
முடித்தவர்களுக்கு உதவித்தொகையுடன் ஒரு ஆண்டு தொழில்பழகுநர் பயிற்சிக்கான
வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிக்கை எண்.RRC/ECR/HRD/Act.App./2021-22
பயிற்சி: Trade Apprentice
காலியிடங்கள்: 2206
வயதுவரம்பு: 15 முதல் 24-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பயிற்சி அளிக்கப்படும் பிரிவில் ஐடிஐ
முடித்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: பத்தாம் வகுப்பு மற்றும் ஐடிஐ படிப்பில் பெற்ற
மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைனில் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
www.rrcecr.gov.in என்ற இணையதளத்தின்
மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.11.2021
No comments