Header Ads

Recent

நவ.9 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை – நவ.27 பணி நாளாக கலெக்டர் அறிவிப்பு

நவ.9 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை – நவ.27 பணி நாளாக கலெக்டர் அறிவிப்பு!

.
தமிழகத்தில் திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா இன்று தொடங்கியுள்ளது. அதில் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார நிகழ்வை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் நவ.9 ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட கலெக்டர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
உள்ளூர் விடுமுறை:
தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி திருவிழா இன்று காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியுள்ளது. இந்த கந்தசஷ்டி திருவிழா 11 நாட்கள் நடைபெறும். இவ்வாறாக இன்று தொடங்கியுள்ள இந்த கந்தசஷ்டி திருவிழா வரும் நவ.15 தேதியன்று முடிவடைகிறது. இந்த கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வே சூரசம்ஹாரம் மற்றும் திருகல்யாணமும் ஆகும். இந்த சூரசம்ஹார நிகழ்ச்சியில் பல்லாயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பிப்பது வழக்கம்.
ஆனால் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக இந்த நிகழ்வுகளில் கலந்துகொள்ள பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து இந்த ஆண்டு நவ.9 ம் தேதி சூரசம்ஹாரமும், 10 ம் தேதி திருகல்யாணமும் நடக்கவுள்ளது. இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் கொரோனா பரவல் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மற்ற நாட்களில் அதாவது இன்று முதல் 8 ம் தேதி வரையும், 11 முதல் 15 ம் தேதி வரையும் தினசரி 10 ஆயிரம் பக்தர்களுக்கு தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த சூரசம்ஹார நிகழ்வை முன்னிட்டு செலவாணி முறிவு சட்டத்தின்படி தூத்துக்குடி மாவட்டத்திற்கு 9 ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.
ஆனால் அத்தியாவசிய பணியாளர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது. இந்த நிகழ்ச்சிகளில் பொது மக்கள் கலந்து கொள்ள தடை உள்ள காரணத்தால் உள்ளூர் தொலைக்காட்சிகள் மூலம் சூரசம்ஹார நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்ய கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து உள்ளது. எனவே பொதுமக்கள் தங்களது வீடுகளில் இருந்து சூரசம்ஹார நிகழ்ச்சிகளை காணுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் இந்த விடுமுறைக்கு பதிலாக வருகிற 27-ந்தேதி அலுவலக நாளாக தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார்.

No comments