Header Ads

Recent

ஏர்டெல் நிறுவனத்தை தொடர்ந்து வோடபோன்- ஐடியா நிறுவனமும் செல்போன் சேவை கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு.: நாளை மறுநாள் முதல் அமல்.

ஏர்டெல் நிறுவனத்தை தொடர்ந்து வோடபோன்- ஐடியா நிறுவனமும் செல்போன் சேவை கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு.: நாளை மறுநாள் முதல் அமல்.
ஏர்டெல் நிறுவனத்தை தொடர்ந்து வோடபோன்- ஐடியா நிறுவனமும் செல்போன் சேவை கட்டணத்தை உயர்த்தியுள்ளது. பிரீபெய்டு கட்டணங்களை 20-ல் இருந்து 25 சதவீதம் வரை உயர்த்தி உள்ளதாக வோடபோன்-ஐடியா நிறுவனம் அறிவித்துள்ளது. உயர்த்தப்பட்ட பிரீபெய்டு கட்டணங்கள், நாளை மறுநாள் முதல் அமலுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.
* 28 நாட்கள் வேலிடிட்டிக்கான ரீசார்ஜ் கட்டணம் ரூ.79-லிருந்து ரூ.99-ஆக உயர்வு.
* 28 நாட்களுக்கு 2GB மற்றும் அன்லிமிடெட் கால்ஸ் கொண்ட ரீசார்ஜ் கட்டணம் ரூ.149-லிருந்து ரூ.179 உயர்வு.
* 28 நாட்களுக்கு தினமும் 1GB மற்றும் அன்லிமிடெட் கால்ஸ் கொண்ட ரீசார்ஜ் கட்டணம் ரூ.219-லிருந்து ரூ.269 ஆக உயர்வு.
* 28 நாட்களுக்கு தினமும் 1.5GB மற்றும் அன்லிமிடெட் கால்ஸ் கொண்ட ரீசார்ஜ் கட்டணம் ரூ.249-லிருந்து ரூ.299 ஆக உயர்வு.
* 28 நாட்களுக்கு தினமும் 2GB மற்றும் அன்லிமிடெட் கால்ஸ் கொண்ட ரீசார்ஜ் கட்டணம் ரூ.299-லிருந்து ரூ.359 ஆக உயர்வு.
* 56 நாட்களுக்கு தினமும் 1.5GB மற்றும் அன்லிமிடெட் கால்ஸ் கொண்ட ரீசார்ஜ் கட்டணம் ரூ.399-லிருந்து ரூ.479 ஆக உயர்வு.
* 56 நாட்களுக்கு தினமும் 2GB மற்றும் அன்லிமிடெட் கால்ஸ் கொண்ட ரீசார்ஜ் கட்டணம் ரூ.449-லிருந்து ரூ.539 ஆக உயர்வு.
* 84 நாட்களுக்கு தினமும் 6GB மற்றும் அன்லிமிடெட் கால்ஸ் கொண்ட ரீசார்ஜ் கட்டணம் ரூ.379-லிருந்து ரூ.459 உயர்வு.
* 84 நாட்களுக்கு தினமும் 1.5GB மற்றும் அன்லிமிடெட் கால்ஸ் கொண்ட ரீசார்ஜ் கட்டணம் ரூ.599-லிருந்து ரூ.719 ஆக உயர்வு.
* 84 நாட்களுக்கு தினமும் 2GB மற்றும் அன்லிமிடெட் கால்ஸ் கொண்ட ரீசார்ஜ் கட்டணம் ரூ.699-லிருந்து ரூ.839 ஆக உயர்வு.
* 365 நாட்களுக்கு 24GB மற்றும் அன்லிமிடெட் கால்ஸ் கொண்ட ரீசார்ஜ் கட்டணம் ரூ.1499-லிருந்து ரூ.1799 ஆக உயர்வு.
* 365 நாட்களுக்கு தினமும் 2GB மற்றும் அன்லிமிடெட் கால்ஸ் கொண்ட ரீசார்ஜ் கட்டணம் ரூ.2399-லிருந்து ரூ.2899 ஆக உயர்வு

No comments