Header Ads

Recent

இல்லம் தேடிக் கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கான ஊக்கத் தொகை ரூ.1000- ஐ எவ்வாறு பெறுவது

இல்லம் தேடிக் கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கான ஊக்கத் தொகை ரூ.1000- ஐ எவ்வாறு பெறுவது
அன்பார்ந்த தன்னார்வலர்களே!
தாங்கள் இல்லம் தேடிக் கல்வியில் இணைந்து அளப்பரிய பணியைச் செய்து வருகிறீர்கள்! பெரும் தொற்றால் பாதிக்கப்பட்ட நமது குழந்தைகளின் கல்வியை மீட்பதற்கு உங்களது பணி மகத்தானது!
பல தன்னார்வலர்கள் தங்களது சுய முயற்சியால் குழந்தைகளுக்கு கற்றல் உபகரணங்களை உருவாக்கி சிறப்பாக கற்பித்து வருகிறீர்கள். தாங்கள் அப்பணியை மென்மேலும் சிறப்பாக செய்து வர ஊக்கத்தொகையாக ஒவ்வொரு மாதமும் ரூ.1000/- வழங்கப்படும்.
டிசம்பர் மாதம் இல்லம் தேடிக் கல்வி வகுப்புகளைத் தொடங்கி குறைந்தபட்சம் 20 நாட்கள் வகுப்புகள் நடத்தியுள்ள தன்னார்வலர்களுக்கான ஊக்கத்தொகை தற்பொழுது விடுவிக்கப்படுகிறது.
இதற்காக தன்னார்வலர்கள் தங்கள் பெயரில் உள்ள வங்கிக் கணக்கு விவரங்களை இல்லம் தேடி கல்வி கைபேசி செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதற்கான ஆப்ஷன் நாளை முதல் செயலியில் ஆக்டிவேட் செய்யப்படும்.
தன்னார்வலர்களுக்கு தனியான வங்கி கணக்கு இல்லை எனில் புதிய வங்கி கணக்கு ‌ஒன்றினைத் தொடங்கி பதிவேற்றம் செய்க.
தன்னார்வலர்களின் பெயர், வங்கி கணக்கு எண், ஐஎஃப்எஸ்சி கோட், ஆகியவற்றுடன் வங்கி பாஸ் புத்தகத்தின் முதல் பக்கத்தில் இந்த விவரங்கள்‌ இடம்பெற்றுள்ள பக்கத்தை புகைப்படம் எடுத்து எடுத்து இல்லம் தேடிக் கல்வி கைப்பேசி செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

No comments