Breaking News பிப்ரவரி 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் - தேர்தல் ஆணையம்
பிப்ரவரி 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் - தேர்தல் ஆணையம்
தமிழ்நாட்டில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார்
அறிவித்துள்ளார்.
கொரோனா 3-வது அலை தீவிரமாக உள்ளதால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க கோரி
உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதற்கு, தேர்தலை தள்ளிவைக்க முடியாது.
கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடித்து தேர்தலை நடத்தலாம் என உயர்நீதிமன்றம்
கூறியது.இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேதியை மாநில தேர்தல்
ஆணையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார், ''சென்னை
உட்பட 21 மாநகராட்சிகள், 641 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் 649 நகர்புற
உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக நகர்புற உள்ளாட்சித்தேர்தல் நடைபெறும்.
ஜனவரி 28ம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கும்.
மனுதாக்கல் செய்ய பிப்ரவரி 4 இறுதிநாள். பிப்வரி 5ம்தேதி வேட்பு மனு பரிசீலனை.
வேட்பு மனுவை திரும்ப பெற பிப்ரவரி 7ம்தேதி கடைசி நாள். பிப்ரவரி 19ம் தேதி
நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும். வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ந் தேதி
நடைபெறும்” என்று தெரிவித்தார்.
No comments