Header Ads

Recent

உள்ளாட்சி தேர்தல் காரணமாக ஆசிரியர்களுக்கான மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான புதிய கலந்தாய்வு கால அட்டவணை வெளியீடு

உள்ளாட்சி தேர்தல் காரணமாக ஆசிரியர்களுக்கான மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான புதிய கலந்தாய்வு கால அட்டவணை வெளியீடு
Click Here

2021-22ம் கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல்கள் மற்றும் பதவி உயர்வுகள் சார்பாக நெறிமுறைகள் ஆணை வெளியிடப்பட்டது . அதன் தொடர்ச்சியாக பார்வை 2 ல் காணும் செயல்முறைகளின் வாயிலாக பொதுமாறுதல்கள் / பதவி உயர்வுகளுக்கான காலஅட்டவணைகள் வெளியிடப்பட்டது. தற்போது தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தலுக்கான பயிற்சி வகுப்புகள் மற்றும் தேர்தல் பணிகள் / வாக்கு எண்ணிக்கை பணிகள் நடைபெறவிருப்பதால் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல்கள் மற்றும் பதவி உயர்வுகள் சார்பான காலஅட்டவணையினை திருத்தம் செய்து இத்துடன் இணைத்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பலாகிறது.

மேலும் , பொதுமாறுதல்கள் / பதவி உயர்வு கலந்தாய்வில் கலந்து கொண்டு ஆணைகள் பெறும் ஆசிரியர்களை 24.02.2022 அன்று பணியிலிருந்து விடுவிக்க சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரைகள் வழங்கிடுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.


No comments