அலகு மாறுதல் பெற்ற ஆசிரியர்களை நிபந்தனைகளின் அடிப்படையில் பணியிலிருந்து விடுவிக்க இயக்குநர் உத்தரவு
அலகு மாறுதல் பெற்ற ஆசிரியர்களை நிபந்தனைகளின் அடிப்படையில் பணியிலிருந்து
விடுவிக்க இயக்குநர் உத்தரவு
தொடக்கக் கல்வி இயக்கத்தின் கீழ் உள்ள ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசுப் பள்ளி
ஆசிரியர்ளுக்கு 2021-2022 -கல்வியாண்டில் தொடக்கக் கல்வி இயக்ககத்திலிருந்து
பள்ளிக் கல்வித்துறைக்கு அலகு விட்டு அலகு மாறுதல் பெற்ற ஆசிரியர்கள் கீழ்கண்ட
நிபந்தனைகளின் அடிப்படையில் பணியிலிருந்து விடுவிக்க அனைத்து முதன்மைக் கல்வி
அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .
நிபந்தனைகள்
1. தொடக்கக் கல்வி இயக்ககத்தின் தடையின்மைச் சான்று பெற்றிருக்க வேண்டும் .
2. துறை மாறுதலில் அலகு விட்டு அலகு மாறுதல் பெற்ற ஆசிரியர்கள் மீது துறை ரீதியான
ஒழுங்கு நடவடிக்கை / குற்றவியல் நடவடிக்கை ஏதும் இருத்தல் கூடாது .
3.துறை மாறுதலில் அலகு விட்டு அலகு மாறுதல் பெற்ற ஆசிரியர்கள் அரசுக்கு செலுத்த
வேண்டிய தொகை ஏதும் இருத்தல் கூடாது .
மேற்காண் நிபந்தனைகள் சரியாக உள்ள பட்சத்தில் பள்ளிக் கல்வித் துறைக்கு அலகு
விட்டு அலகு மாறுதல் பெற்ற ஆசிரியர்களை பணியிலிந்து விடுவிக்க வேண்டும் . மேலே
தெரிவித்துள்ள நிபந்தனைகள் பின்பற்றாமல் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டால் அதன்
முழுபொறுப்பும் சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலரையே சாரும் என திட்டவட்டமாக
தெரிவிக்கப்படுகிறது.
No comments