Header Ads

Recent

பொறியியல், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர ஜூலை 27 வரை சிபிஎஸ்இ மாணவர்களுக்கு அவகாசம்: உயர்கல்வித்துறை அறிவிப்பு

பொறியியல், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர ஜூலை 27 வரை சிபிஎஸ்இ மாணவர்களுக்கு அவகாசம்: உயர்கல்வித்துறை அறிவிப்பு
பொறியியல், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர ஜூலை 27 வரை சிபிஎஸ்இ மாணவர்களுக்கு அவகாசம் அளிக்கப்பட்டிருக்கிறது. சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் உயர்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வந்தபின் 5 நாட்கள் அவகாசம் வழங்கப்படும் என ஏற்கனவே உயர்கல்வித்துறை அறிவித்திருந்தது. தமிழக அரசு கொடுத்த அழுத்தத்தால் முன்கூட்டியே சிபிஎஸ்இ தேர்வு முடிவு வெளியிடப்பட்டிருக்கிறது. 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உள்ள 1.40 லட்சம் இடங்களில் சேர 4 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

400க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் சேர இதுவரை 2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று உயர்கல்வித்துறை தெரிவித்திருக்கிறது. சிபிஎஸ்இ மாணவர்களுக்கு இடமில்லை என எந்த தனியார் கல்லூரியும் மறுக்கக்கூடாது எனவும் உயர்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இன்று காலை 10 மணியளவில் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டன. cbseresults.nic.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டதால் கல்லூரி மாணவர் சேர்க்கை தாமதமானது. இந்நிலையில், பொறியியல் சேர மாணவர்களுக்கு 27 வரை அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது.

No comments